தெரி விமர்சனம் ...

[ 6306 ]
தெரி விமர்சனம் ...
தெரி விமர்சனம் ...
 
             வழக்கமான  பஞ்ச்  டயலாக்கோடு  பிரமாண்டமான  அறிமுகக்காட்சியாக  இல்லாமால் மிகச்சாதாரணமாக  ஆரம்பிக்கிறது  படம் 
 
            படம் ஆரம்பித்தநேரத்திலிருந்து  விஜய் க்கு மகளாக  நடித்திருக்கும்  மீனாவின்  மகள்  நைநிகாவே  அதிகம் கவர்கிறார் ... விஜய்க்கும்  நைநிகா வரும் காட்சிகள்  போரடிக்காமல் போகிறது , படம் கொஞ்சம்  மெதுவாக இருந்தது  போலிருந்தாலும் அடுத்தடுத்த  காட்சிகள் சுவாரஸ்யம்  குறையாமல்  போகிறது ..
 
          கேரளாவில்  ஆரம்பிக்கும்  படம் , ஜோசப்  குருவில்லா  என்கிற கதா  பாத்திரத்தில் மிக அமைதியான  அப்பாவாக  இருக்கும் விஜய்  அடிதடிக்கு  பயந்து ஒதுங்கி  போகிற அப்பாவாக  இயல்பாக நடித்திருக்கிறார் ..ஆங்கிலோஇந்தியன்  டீச்சராக எமி ஜாக்சன் அழகாக  வந்து போகிறார் ,  நைநிகாவுக்கும்  எமியும்  வரும் காட்சிகள் போரடிக்காமல்  செல்கிறது .. அதுவும் நைநிகா  பேசும் வசங்கள்  கியூட் . மலையாளம்  பேசும்  எமி  , அமைதியான  விஜய் , துடிப்பான  நைநிகா இப்படியே  மெதுவாக  செல்லும் கதையில் வழக்கம்போல  வில்லன்கள்  வடிவில்  வருகிறது  மோதல் ...  
 ஒரு கட்டத்தில்  உள்ளூர்  ரவுடிகளால்  தனது  மகளுக்கு ஆபத்து வருகிறது . அதுவரை  பயந்த  சுபாவமாக  இருக்கும் விஜய்   அதிரடியில்  இறங்கி  ரவுடிகளை  துவைத்து எடுக்கிறார் ... பிளாஸ்பேக்  ஓப்பன் ஆகிறது .....
 
        போலிஸ்  உயர் அதிகாரியாக  சென்னையில்  இருக்கும்  விஜய்  நேர்மையான  போலிஸ்  அதிகாரியாக  இருக்கிறார் , பெண்கள்  குழந்தைகள் பாதுகாப்புக்காக  அநியாயத்துக்கு நேர்மையாக  இருப்பவர் .. அப்பப்போ  அதிரடி  ஆக்சன் , கொஞ்சம்  காமெடி , சமந்தாவுடன்  காதல்  என்று  போகிறவரின்  வாழ்க்கையில் ஒரு கற்பழிப்பு  வழக்கை  விசாரிக்க  செல்வதில்  இருந்து  சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது  கதை , வில்லனாக  அறிமுகமாகிறார்  இயக்குனர் மகேந்திரன் , தனது இயல்பான நடிப்பால்  மனுஷன்  மனம் கவர்கிறார் . அரசியல்வாதி  கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்துகிறார் ....விஜய்  , மகேந்திரன்  சந்திக்கும் கட்சிகளுக்கு  மெனெக்கெட்டு  வசனம் எழுதியிருப்பது  தெரிகிறது .. கற்பழிப்பு வழக்கில்  குற்றவாளி மகேந்திரனின் மகனுக்கு தண்டனையை  கொடுக்கும் காட்சியோடு  இண்டர்வெல்  முடிகிறது ...
 
 
         மகனை  கொன்ற  போலிஸ்  அதிகாரி விஜய் யை  கொடூரமாக  பழிவாங்கும் நோக்கில்  ஒருபக்கம்  மகேந்திரன் முயற்சிக்க  ,ஒரு பக்கம் சமந்தாவுக்கும் , விஜய்க்கும்  லவ்வாகி  கல்யாணத்தில் முடிந்து  குழந்தையும் பிறக்கிறது , அமைதியாக  செல்லும் வாழ்க்கையில்  திடீரென்று  மகேந்திரனின் ஆட்கள் விஜய்  சமந்தா , ராதிகா  என அனைவரையும் போட்டுத்தள்ளுகிறார்கள் , விஜய்  மட்டும் குழந்தையோடு தப்பித்து கேரளாவில்  ஜோசப்  குருவில்லாவாக  வாழ்த்து வருகிறார் . இடை அறிந்து கொண்ட  மகேந்டிரனின் ஆட்கள்  மீண்டும் வந்து  விஜயுடன்  மோதுகிறார்கள்  முடிவில்  செண்டிமெண்ட்  சண்டையோடு  இரண்டாம் பாகத்துக்கான  அறிவிப்போடு  படம் முடிகிறது ....
 
 
         முதல் பாதி  குடும்ப  செண்டிமெண்ட் , குழந்தை  செண்டிமெண்ட்  என்று ஆரம்பித்தாலும்  விஜய்  படத்துக்கென்று  இருக்கும் மாஸ் குறையாமல்  எடுத்திருக்கிறார்  அட்லி , சமந்தா,  எமி இரண்டு ஜோடிகளும்  அவரவர்  பங்கிற்கு  நடித்திருக்கிறார்கள் .. கொஞ்சம் அதிகமான  செண்டிமெண்ட்  இருக்கிறது போல படம் நகர்ந்தாலும்  இடையிடையில்  விஜய், நைநிகா , மொட்ட ராஜேந்திரன்  என்று  கலகலப்புக்கு  பஞ்சமில்லாமல்  செல்கிறது ...
 
 
  பெண்கள்  குழந்தைகள்  விஜய்  ரசிகர்கள் கொண்டாடும்  படமாக மட்டும் வந்திருக்கிறது  இந்த "தெரி ."
3.5