"வைகை எக்ஸ்பிரஸ்"

[ 1289 ]
"வைகை  எக்ஸ்பிரஸ்"

 

குத்துப்பாட்டு இல்லை, கசக்கி பிழியும் சென்ட்டிமென்ட் இல்லை , ஆபாச வசனமில்லை , காதல் காட்சிகள்  இல்லை , ரத்தம் தெறிக்கும்  வன்முறை இல்லை ஆனாலும் பரபரப்பான ஒரு  தமிழ்ப்படம்தான் "வைகை  எக்ஸ்பிரஸ்"

சென்னையில்  இருந்து  மதுரை  செல்லும் வைகை  எக்ஸ்பிரஸ் ரயிலில்  மூன்றுபேர்  மர்மமான  முறையில்  கொலை செய்யப்படுகிறார்கள் , 
அந்த கொலை எப்படி நடந்தது , யார்  செய்தார்கள் என்பதை  பரபர விறுவிறு கதையில் சொல்ல வருவதுதான் "வைகை  எக்ஸ்பிரஸ்".

கதையின் நாயகனாக  ஆர் கே  மிகப்பொருத்தமாக  நடித்திருக்கிறார் .,துப்பறியும் போலீஸ்  அதிகாரி வேடத்தில் மிகக்கச்சிதமாக  பொருந்துகிறார் . சிக்கலான  துப்பறியும்  காடசிகளில் அவருக்கே  உரிய ஸ்டைலில் அமர்க்களப்படுத்துகிறார் .

இன்னொரு முக்கிய  கதாபாத்திரத்தில்  நீது சந்திரா  இரட்டை  வேடங்களில் நடித்திருக்கிறார் , ஆர்.கே, , இனியா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மனோ பாலா, சுமன், ரமேஷ் கண்ணா, சித்திக், ஜான்விஜய், சுஜா வருணி, கோமல் ஷர்மா,சிங்கமுத்து, அனுமோகன், அனுப் சந்திரன், அர்ச்சனா, இவர்களுடன்
இயக்குனர் R.K. செல்வமணி என்று  ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள் ..

படத்தில் ஏராளமான திருப்பங்களும் , வேகமும் படம் பார்க்கும்  நம்மை  கவனமாக  பார்க்க வைக்கும் . அடுத்தடுத்து மூன்று கொலைகளை  விசாரிக்கும் பொறுப்பான அதிகாரியின் முடிவுகள் படத்தின் வேகத்தை  அதிகப்படுத்தும்  விதமாக படம் நெடுகிலும்  வருவதால் கிளைமாக்ஸ் வரை  போரடிக்காமல் கதை செல்கிறது . எல்லாம் அவன் செயல்,என் வழி தனி வழி படங்களை தொடர்ந்து தரமான அதிரடி த்ரில்லர் படத்தை ஆர்.கே-ஷாஜி கைலாஷ் கூட்டணி தந்திருக்கிறார்கள் ..

சஸ்பென்ஸ்  படத்தை விமர்சனம்  செய்வதை விட  திரையில் காண்பது  இன்னும் சுவாரஸ்யம்  தரும் .  கண்டிப்பாக  தியேட்டரில்  பார்க்கலாம் .

3